members only event !!
🌟 *CTS திருக்குறள் & ஆத்திச்சூடி போட்டி – பரிசுத் தொகை வழங்கும் ஆதரவாளர்களுக்கான அழைப்பு* 🌟
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்தப் போட்டியை மீண்டும் நடத்துவதில் கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சி கொள்கிறது.
இறுதி கோப்பையும் பரிசுத் தொகைகளையும் CTS வழங்குகிறது. *நம்* சமூகத்தின் அழகிய *மரபின்படி*—ஒரு திருக்குறளுக்கு $1 மற்றும் ஆத்திச்சூடியின் 4 வரிகளுக்கு $1 எனப் *பலர் இணைந்து பரிசுத் தொகைக்காக ஆதரவு வழங்குவது வழக்கம்.* விருப்பமுள்ளவர்கள் தங்களால் இயன்ற அளவில் பங்களிக்கலாம்.
*முன்னாள் ஆதரவாளர்களின் பெருந்தன்மைக்கு நம் மனமார்ந்த நன்றிகள்*🙏 உங்கள் பங்களிப்பு நம் குழந்தைகள் தமிழ் இலக்கியத்தை அறிந்து, பயின்று, பெருமையுடன் வெளிப்படுத்துவதற்கு தொடர்ந்து ஊக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் *முந்தைய ஆதரவாளர்களும் புதிய ஆதரவாளர்களும்* இணைந்து ஆதரவு வழங்க அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். எந்த அளவு தொகையாயினும், உங்கள் பங்களிப்பு நம் இளம் தலைமுறையின் தமிழ் இலக்கியப் பயணத்தை வலுப்படுத்தும் ஒரு சிறப்பான செயல்.
Sponsor ஆக விரும்பினால் columbustamilsangamcts@gmail.com‑க்கு email அனுப்புங்கள்.
*தமிழ் இலக்கியத்தின் பெருமையை அடுத்த தலைமுறைக்கு உயர்த்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.*
*அன்புடன்,*
*கொலம்பஸ் தமிழ்ச் சங்கம்*

